பள்ளியின் சாதனை

இப்பள்ளியானது இதுவரை 17 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 % தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது

 கல்வி மாவட்ட அளவிலான பூப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் அண்மையில் பாராட்டப்பட்டனர்.

  ஒரத்தநாட்டில் அண்மையில் நடைபெற்ற பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான சீனியர் மகளிர் பூப்பந்து இறுதிப் போட்டியில் மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.   இதையொட்டி, வெற்றி பெற்ற மாணவிகள் 

                            வே. கவிநிலா, 
                            க. மோகனப்பிரியா, 
                            பெ. தர்மக்கனி, 
                            ம. சுமித்ரா, 
                            செ. ரத்னப்பிரியா, 
                            அ. அபிநயா, 
                            இரா. வினோதா, 
                            சு. அனிதா, பயிற்சியளித்த உடல் கல்வி ஆசிரியர் தி. பெஞ்சமின் கார்மென் 

ஆகியோரை மூத்தாக்குறிச்சி முன்னாள்  ஊராட்சித் தலைவர் வி. சின்னக்கண்ணு, பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கருணாகரன், தலைமை ஆசிரியர் வே. மாரியப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

வெற்றி மாணவிகளுக்கு மூத்தாக்குறிச்சி இணைய குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ,  தங்களை கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

--------
 கடத்த செப்டம்பர் 23 அன்று  தினமணி நாளிதழில் மற்றும் தினமணி இணையதளத்திலும் இந்த தகவல்  வெளியானது .
தினமணி இணையத்தளத்தில் மேலும் அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்.

Comments